வெடித்து சிதறிய நீராவி கொதிகலன்... காற்றில் கசிந்த வாயுவால் கண் எரிச்சல்...!!

 
கொதிகலன்

திருச்சி மாவட்டம், மணப்பாறை   பாலப்பட்டியில்   தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும்   பால்  குளிரூட்டப்படும்.  அதன்பின்பு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இன்று காலையில் பால் குளிரூட்டும் நிலையத்தில் உள்ள நீராவி கொதிகலன் திடீரென பெரும் சத்தத்துடன் வெடிது சிதறியது.

கொதிகலன்

இதில் அமோனியம் குளோரைடு வாயு கசிந்தது. கொதிகலன் வெடித்ததில் தொழிற்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் பல அடி தூரம் தூக்கி எரியப்பட்டன.  இந்நிகழ்வு நடைபெற்ற போது  பணி செய்பவர்கள் யாரும் உள்ளே  இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  அமோனியம் குளோரைடு வாயு கசிவு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் சுற்று வட்டார பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

மின்சாரம்

காற்றில் பரவிய வாயுவால் பொதுமக்களிடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். மேலும்   கொதிகலன்  வெடிப்பால் பல  கோடி ரூபாய் சேதம் எனவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web