ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக் லோகோ மாற்றம்... மெட்டா நிறுவனம் அதிரடி!

 
ஃபேஸ்புக்

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரை தன்வசப்படுத்தி பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். குறிப்பாக ட்விட்டர் தளத்தை எக்ஸ் தளமாக பெயர் மற்றும் லோகோ மாற்றம் செய்தார். அதே போல் பேஸ்புக்கின் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சமூக வலைதளங்களில்சமீபகாலமாக ஏற்பட்ட பெரும் நிகழ்வு ட்விட்டரின் அதிரடி மாற்றங்கள் தான்.  

ஃபேஸ்புக்

ட்விட்டர் பயனர் ஒருவர் சாதாரணமாக குறிப்பிட்ட X என்பதையே ட்விட்டருக்கான புதிய லோகோவாக  எலான் மஸ்க் தேர்வு செய்ததும் பரபரப்பானது.
 ட்விட்டர் வரிசையில் ஃபேஸ்புக்கும் தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.  ட்விட்டர் அளவுக்கு பெரும் மாற்றம் இல்லை என்றாலும் ஃபேஸ்புக் லோகோ மாற்றமும்  பயனர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் படி ஃபேஸ்புக் என்பதன் ஆங்கில  முதல் எழுத்தில் மிக மிகச் சிறிய மாற்றத்தையும் பொலிவையும் கூட்டியுள்ளனர். அத்துடன் நீலநிற மெருகு சற்றே  அதிகரித்து காணப்படுகிறது.  

பேஸ்புக் பெயர் மாற்றம்! மார்க் அதிரடி அறிவிப்பு!

அத்துடன் லேசாக பின்னால்  இருள் நிழல்  படிவதையும் சற்றே பதிவு செய்துள்ளனர்.  அவ்வளவுதான், ஃபேஸ்புக் லோகோவின் மாற்றம்! என்ன நோக்கத்துக்காக மெட்டா இதனை மேற்கொண்டது என்பது  குறித்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. எனினும் இந்த எளிய புதிய மாற்றத்திற்கும்  ஃபேஸ்புக் பயனர்கள் கருத்துக்களையும், கமெண்ட்களையும் தெரிவித்து  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web