தொடரும் திடீர் மரணங்கள்... 100 நாள் திட்டப் பணியில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

 
ராசப்பன்

பணிபுரியும் போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த திடீர் உயிரிழப்புக்கள் அச்சம் தருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் முனியூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர்  ராசப்பன் . இவருக்கு வயது 55. இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவி இருவரும் முனியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள்  பணி திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர்.    

100 நாள் வேலை

வழக்கம் போல் அன்றும்  100 நாள் வேலை முனியூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி   சாலையில் நடைபெற்றுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாலை ஓரத்தில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த ராசப்பன் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். சக பணியாளர்கள் உடனே அவரை தூக்கி முகத்தில்  தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.   தொடர்ந்து அவர் பேச்சு மூச்சின்றி இருந்ததால்   உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

100 நாள் வேலை


 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ராசப்பனை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து   காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்து கொண்டிருந்த முதியவர்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web