அதிர்ச்சி... மனித கல்லீரலை மசாலா தடவி சமைத்து சாப்பிட்ட போலி மருத்துவர்... !!

 
கேசவமூர்த்தி

கும்பகோணம்   போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி . இவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசித்து வருபவர் கேசவமூர்த்தி. இவர்  போலி சித்த மருத்துவர். நவம்பர் 13ம் தேதி  தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியில் வசித்து வரும்  டிரைவர் அசோக்ராஜை  போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்துள்ளார். அவரது  உடலை தனது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.  

அசோக்ராஜ்

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  அசோக்ராஜை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி நுரையீரல், கல்லீரல் இவைகளை  வீட்டிலேயே மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.  அதே போல் 2021 நவம்பர் 27ல்  மாயமான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அனஸ்  என்ற  26 வயது இளைஞரையும், அசோக்ராஜை கொலை செய்தது போல் கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி  சமைத்து சாப்பிட்டுள்ளார் . மீதமுள்ள பாகங்களை அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைத்துள்ளது   தெரிய வந்தது. கேவசமூர்த்தி மேலும் பலரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

அசோக்ராஜ்


  நேற்று காலை தஞ்சாவூர் எஸ்.பி  முன்னிலையில்  கேசவமூர்த்தி வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.  கைரேகை நிபுணர்,  நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்  மற்றும்  மோப்ப நாய் உதவியுடன் கேசவமூர்த்தி வீட்டில் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை சுற்றி தோண்டியதில் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் சிக்கின.  30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்திருக்கிறது. மேலும்  கேசவமூர்த்தி வீட்டில் இருந்த ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள் ,  பெண்கள் பயன்படுத்தும் நகைகள்  நைட்டி  மற்றும் பல  பொருட்கள் கிடைத்துள்ளன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  
 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web