இயக்குநர் பாலா பெயரில் போலி இன்ஸ்டா!! காவல்துறையில் புகார்!!

 
இயக்குநர் பாலா

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாலா. இவரது பெயரில் பல மோசடி அக்கவுண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து இயக்குநர் பாலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் “எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை, மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் ”என தெரிவித்துள்ளார்.இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி சிலர் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.  

இயக்குநர் பாலா

பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன்   திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி   கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டு வருகின்றனர்.    

பாலா

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்க வேண்டும் என  இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web