வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார்!

 
சாமியார்
 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் ஆவடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (54). இவருக்கு கடந்த மே மாதம் ஆவடி அருகே திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வசித்து வந்த சீனிவாசன் (32) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின்னர் சீனிவாசன், “நான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய நண்பர். அவரின் மூலமாக வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒதுக்கீடு பெற்றுத் தருவேன். இதற்காக ஒரு வீடுக்கு ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும்” என்று கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய ஜெகநாதன், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ரூ.20 லட்சம் வசூலித்து சீனிவாசனின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் வீட்டு ஒதுக்கீடு நடைபெறாததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகநாதன், ஆவடி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், “நவசக்தி பீடம்” என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்த சீனிவாசன், போலி சாமியார் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் எந்தத் தொடர்பும் இல்லாமல் மக்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும், முக்கிய தேசிய கட்சித் தலைவரின் பெயரை பயன்படுத்தி, “அவர் மூலமாக தேர்தலில் எம்.பி. சீட் வாங்கித் தருவேன்” என கூறி, இன்னொரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்ததும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். சீனிவாசனிடம் இருந்து கூடுதல் தகவல்கள் பெற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!