பெற்றோர்களே உஷார்... பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவர் தற்கொலை!

 
பப்ஜி

செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, இந்த தலைமுறை மாணவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்தில் உள்ளனர். இது குறித்து சரியான தருணத்தில் மனநல ஆலோசகரின் உதவியுடன் செயல்படுங்க.

சென்னை கோடம்பாக்கம் லிங்கேஸ்வரர் நகரில் வசித்து வருபவர்   ராஜேஷ் .இவரது மகன் பிரவீன். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர்  பகுதி நேரமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  

மாணவர் தற்கொலை

இந்நிலையில், பிரவீன் நேற்று நீண்ட நேரமாக மொபைலில்  பப்ஜி கேம் விளையாடிக் கொண்டே இருந்தான்.  இதனால் பிரவீனை, அவரது தாயார் சரமாரியாக திட்டியுள்ளார்.  
நேற்று வீட்டில் உள்ள அனைவரும் பணிக்கு சென்று விட்ட நிலையில்  பிரவீன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். இந்நிலையில், அவரது தாயார் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.  வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.   

ஆம்புலன்ஸ்

அப்போது மின்விசிறியில் பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அதிர்ச்சி அடைந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரவீன், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மொபைலில் கேம் விளையாடாதே எனக் கூறியதை கேட்டு மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பெற்றோர் கதறித் துடித்த காட்சி காண்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web