அதிமுகவிலும் குடும்ப அரசியல் ... எடப்பாடி மீது செங்கோட்டையன் கடும் குற்றச்சாட்டு!

 
செங்கோட்டையன்
 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். “தி.மு.க.வில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை ஆகியோர் கட்சி செயல்பாடுகளில் தலையிடுகின்றனர்,” என்று அவர் கூறியதால், கட்சியின் உள் மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

எடப்பாடி

செங்கோட்டையன் மேலும், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் கட்சி வெற்றிக்காக உழைத்தேன். அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக இரு முறை வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தேன்,” என தெரிவித்தார். ஆனால், பழனிச்சாமி தலைமையில் கட்சி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததாகவும், “தன்னால் முடியாததை முடியும் என்று கூறி தன்னையும், பிறரையும் ஏமாற்றுகிறார்” எனவும் கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி

அவர் தொடர்ந்தும், கட்சியின் ஒற்றுமைக்காக பிரிந்த தலைவர்களை இணைக்க முயன்றதாக கூறினார். பசும்பொன்னில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனுடன் நடந்த சந்திப்பும் அதிமுக ஒற்றுமைக்காகவே என விளக்கினார். செங்கோட்டையனின் இந்த பேட்டி, அதிமுகவின் உள் பிளவுகளை வெளிச்சமிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பழனிச்சாமி தலைமையை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில், அவரது இந்த கருத்துக்கள் புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!