குடும்ப பிரச்சனை.. மனைவி உட்பட மூன்று பேர் கொடூர கொலை.. கணவன் வெறிச்செயல்!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள முனகல் கிராமத்தை சேர்ந்தவர்கள் நவீன் (வயது 28) - அன்னபூரணி (வயது 25). அன்னபூரணியின் தந்தை பசவராஜப்பா (வயது 52), தாய் கவிதா (வயது 45). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நவீன்-அன்னபூரணி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் நவீன் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், ஓராண்டுக்கு முன், தன் குழந்தையுடன், தவணகெரே மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். கடந்த சில மாதங்களாக நவீன், மனைவியை தன்னுடன் அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் அன்னபூரணி மற்றும் அவரது பெற்றோர் நவீன் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்களை அனுப்ப நவீன் காரில் அழைத்துச் சென்றார். அன்னபூரணியும் உடன் சென்றார்.
அப்போது நவீனுக்கும், மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்னபூரணி தனது பெற்றோருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், காரில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் சரமாரியாக தாக்கினார். மேலும், அவர் கத்தியை எடுத்து 3 பேரை (Stabbing To Death) கொடூரமாக குத்தினார். இதையடுத்து, இருவரது உடலையும் தனித்தனியாக காட்டில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சைதாப்பூர் போலீஸார், அன்னபூரணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது பெற்றோரின் உடலை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான நவீனை தேடி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா