பிரபல நடிகர் நடுரோட்டில் படுத்து போராட்டம்!! பரபரப்பு!!

நேற்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.
Andhra Pradesh | Jana Sena party chief Pawan Kalyan staged a protest after his convoy of vehicles was blocked by the Andhra Pradesh police in the NTR district. Pawan Kalyan laid on the road in protest against the police. (09.09)
— ANI (@ANI) September 9, 2023
(Pic Source: Jana Sena party) pic.twitter.com/uVyPGkKXzu
சந்திரபாபு நாயுடுவைப் பார்க்க விமானம் மூலம் புறப்பட பவன் கல்யாண் தயாரானார். ஆனால் காவல்துறை அனுமதி தரவில்லை. இதனையடுத்து கார் மூலம் ஹைதராபாத் பயணிக்கத் தொடங்கினார். போலீசார் அதையும் தடுத்து நிறுத்தினர். சந்திரபாபு நாயுடு தற்போது உள்ள மங்களகிரிக்கு நடந்து செல்ல பவன் கல்யாண் முடிவு செய்தார்.இதற்கும் அனுமதி தராததால் பவன்கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர் கேட்காததால் காவல்துறை பவன் கல்யாணை கைது செய்தது. தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதால், நீதிபதி முன் ஆஜர்படுத்த தேவையில்லை எனக் கூறினர். சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!