பணம் கேட்டு தினம் அடி, உதை, சித்ரவதை... என் மகள் பட்டபாடு... கதறும் ராஜ்கிரண் .. !

 
ராஜ்கிரண்

ராஜ்கிரண் மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவை 2022ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ராஜ்கிரண் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கேட்கவேஇல்லை. எனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என ராஜ்கிரண் கடுமையாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரியா தனது கனவரை பிரிந்து விட்டதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ப்ளீஸ் டாடி என்னை மன்னிச்சிடுங்க... என கண்ணீர் விட்டு கதறி அழுதிருந்தார். மீண்டும் முனீஸ்ராஜா அவரை வாழ அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையி இது குறித்து ராஜ்கிரண் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜ்கிரண்

அதில் “பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ்ராஜா மற்றும் அவனது குடும்பத்தினரின்  வேலை.  இந்த செயலுக்காக   கொல்லிமலையில்  வசியம் செய்யப்பட்ட மருந்துகளை  வாங்கி அதை சம்பந்தப்பட்ட பெண்களை  சாப்பிட வைத்துவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் சொல்வதையே அந்த பெண்களும் கேட்கின்றனர்.  இப்படி ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பமே பணம் பறித்துள்ளது. இது தான் அவர்களின் வேலை இதுவே என் மகளுக்கும் நடந்தது.  ஆனா இதைப் பத்தியெல்லாம் எதுவுமே தெரியாமல்  என் பொண்ணு போய் மாட்டிக் கொண்டது. அந்த பையனை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. இப்போது  என் பெண்ணை நான் தான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்து கொள்கிறேன். என் பெண்ணுடன் வாழணும் என  நினைப்பவன் பெண்ணை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு பணம் வாங்கிட்டு வா என டார்ச்சர் செய்துள்ளான். அத்துடன்  குடித்துவிட்டு அடிப்பது, டார்ச்சர் செய்வது என எல்லா வகையான கொடுமைகளையும் செய்துள்ளான்.

ராஜ்கிரண்

 என் மகளிடம் திருமணத்தின் போது சொன்னேன்  “என் எதிர்ப்பை மீறி திருமணம் செய்றீங்க. ஒரு வருடம் நல்லபடியா உன்ன வச்சு அவன் வாழ்ந்தான் என்றால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் இல்லையென்றால் என் முகத்தில் முழிக்காதே ” என்றேன்.   ஆறேழு மாதத்தில் என் மகள் பிரிந்து வந்துவிட்டார்  .   தினமும் குடித்துவிட்டு வந்து அடித்ததால் உடல்ரீதியாக என்மகள் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதய  பாதிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.  ஆரம்பத்தில் எனக்கு தெரியாது.   வேறு ஒருவர்  மூலம் விஷயம்  தெரியவர  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தேன் . இதன் பிறகு மீண்டும்   முனீஸ்ராஜா  மகளுடன் வாழ பேசி உள்ளார். ஏற்கனவே முனீஸ்ராஜா நிறைய திருமணம் செய்திருப்பது என்   மகளுக்கு தெரியவர அவர் தெளிவாக பதில் அளித்துவிட்டார். தற்போது என் மகள் மன ரீதியாகவும்  உடல் ரீதியாகவும் பாதிப்பில் இருந்து மீண்டு வர  சிகிச்சை எடுத்து வருகிறார்” என  ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்....

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க


 

From around the web