பிரபல நடிகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டணை... பரபரப்பு தீர்ப்பு!

 
எஸ்விசேகர்

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்விசேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது குறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உடனடியாக  ரத்து செய்ய வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றத்தில்   எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.அதே நேரத்தில்   பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை  பதிவிட்டதற்காக   நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார்.

எஸ்விசேகர்

ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என  பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம்   எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.  இதனையடுத்து  இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட்டு இன்று பரபரப்பு  தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளன.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதற்காக   அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15000  அபராதமும் விதித்து சென்னை சிறப்புகோர்ட்டு  தீர்ப்பு வழங்கியது.  சென்னை  உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அவருக்கான  சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web