பகீர் வீடியோ.. கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!!

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானுடன் ‘ஸ்வதேஷ்’ படத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ஜோஷி. இவர் தற்போது தனது கணவர் விகாஸ் ஓபராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். இத்தாலியில் நடந்த ஒரு சூப்பர் கார் டூரில் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீர் விபத்து ஏற்பட்டது.
Two deaths on a Ferrari in Sardina, Italy pic.twitter.com/skT3CaXg0T
— Globe Clips (@globeclip) October 3, 2023
அடுத்தடுத்து பல கார்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் ஃபெராரி காரில் பயணம் செய்த ஒரு தம்பதி அங்கு சென்ற லம்போஹினி காரை வேகமாக ஓவர்டேக் செய்ய முயற்சித்தார். அப்போது, அருகில் பயணித்த வேனில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. அந்த ஃபெராரி கார் தீப்பிடித்து அதில் பயணித்த தம்பதி இருவரும் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மார்க்கஸ் க்ராடலி ,மெலிஸா க்ராடலி தம்பதி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு நடிகை காயத்ரி, கடவுளின் அருளால் சிறிய காயங்களுடன் தப்பித்துள்ளோம். அத்துடன் தானும் தன் கணவரும் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...