பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்.... திரையுலகில் தொடரும் சோகம்!!
திரைத்துறைக்கு போதாத காலம். அடுத்தடுத்து மூத்த கலைஞர்கள் நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டே இருக்கின்றனர். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அந்த வகையில் சக்தே இந்தியா நடிகர் ரியோ கபாடியா நேற்று காலமானார். இவருக்கு வயது 66. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சக்தே இந்தியா. இந்த திரைப்படம் விளையாட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம். இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருந்த ரியோ கபாடியா இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
நடிகர் ரியோ கபாடியா கேன்சரால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியோ கபாடியா சக்தே இந்தியா, ஹாப்பி நியூ இயர், தில் சாத்தா ஹை உட்பட பல வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவருடைய மனைவி க்கு மரியா என்ற மனைவியும், ஃபாரா என்ற மகளும் உள்ளனர். இவரது மறைவிற்கு பாலிவுட் திரைப்பட நட்சத்திர நடிகர்கள்,உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!