”ஓ மை காட்” பட நடிகர் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
சுனில் ஷெராப்

ஓ மை காட் பாகம் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சுனில் ஷ்ராப் . இவர் அக்‌ஷய் குமார், பங்கஜ் திரிபாதியுடன் இணைந்து நடித்தவர். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் பெரும்  வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில் நேற்று திடீரென அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.காரணம் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது மறைவுக்கு  பாலிவுட் பிரபலங்களும், திரைப்பட அமைப்புகளும்   இரங்கல் தெரிவித்து வருகின்றன.  சுனில் மீதான அபிமானத்தால், பாலிவுட்டின் பிரபல ’சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கம்’ உட்பட பல்வேறு சினிமா அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.சுனில் ஷ்ராஃப் பாலிவுட்டில் வெளியான  ’ஷிதத்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்பட்டார்.  

சுனில் ஷெராப்

இந்த திரைப்படத்தில் மோஹித் ரெய்னாவின் தந்தையாக, சன்னி கௌஷல், ராதிகா மதன் மற்றும் டயானா பென்டி  இவர்களுடன் இணைந்து நடித்தார். பின்னர் ’கபாத் தி காயின்’ ’ஜூலி’, ’ஜகன்யா’, ’அபய்’ உட்பட பல்வேறு தொடர்களில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.  திரைப்படங்கள், தொடர்கள் வரிசையில் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலமாகவும்    பிரபலமானார்.   அனைத்தையும் கொண்டாடும் வகையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவாகவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில்  சுனில் ஷ்ராஃபின் எதிர்பாரா திடீர் மரணம் பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web