பகீர்.. பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது... ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
வினு

பிரபல நகைச்சுவை நடிகர் பினு பி. கமால் இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர்  நேற்று மாலை திருவனந்தபுரத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும்  அரசு பேருந்தில் புறப்பட்டுச் சென்றார்.  அப்போது அவரது இருக்கைக்கு அருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.

வினு


 வட்டப்பாறை என்ற இடத்திற்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்த  போது, பினு கமால் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் அந்த இளம்பெண்   அதிர்ச்சி அடைந்து  கத்தி கூச்சலிட்டார். உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்த, பினு கமால் பேருந்தில் இருந்து இறங்கி ஓடத் தொடங்கினார்.   அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டிச்சென்று பிடித்தனர்.

போலீஸ்

இதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரியாக வந்து  பினு கமாலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  தீவிர விசாரணைக்குப் பிறகு பினு கமாலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது குறித்து அவரது ரசிகர்கள் நண்பர்கள், உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web