திரையுலகில் சோகம்.... தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் காலமானார்..!!

 
கேஜி ஜார்ஜ்

1971ல் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில்   டிப்ளமா பட்டம் பெற்றவர் கே.ஜி.ஜார்ஜ்.நடிகர், எழுத்தாளர், இயக்குநர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 77. இவரது மறைவு மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜின் மறைவுக்கு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் , நண்பர்கள் உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

கேஜி ஜார்ஜ்


 இவர்  1972ல்   ‘மாயா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இனை இயக்குநராக அறிமுகமானார்.   1976ல்   ‘ஸ்வப்நதானம்’ படத்தின் மூலம் இயக்குநரானார்.  இயக்குநரான முதல் படமே  சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. 40 வருடங்கள் சினிமா உலகில் கோலோச்சிய ஜார்ஜ் 10 படங்களை இயக்கியவர்.  

கேஜி ஜார்ஜ்

இவரது இயக்கத்தில் வெளியான  வியாமோஹம், ராப்படிகளுடே கதா, இனியவள் உறங்கத்தே, ஒனப்புடவ, மன்னு, யவனிகா உட்பட பல படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.  இதில் கிளாசிக் ஹிட் அடித்த யவனிகா படத்துக்கு மாநில விருது கிடைத்தது.   கே.ஜி.ஜார்ஜ் கொச்சியில் உள்ள முதியோர் மையத்தில் சில காலமாக வசித்து வந்தார். பலமுறை மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web