பிரபல சினிமா நடிகை மகள் திருமணம்.... குவிந்த திரைப்பிரபலங்கள்... !

 
விஜி சந்திரசேகர்

80களில் பிரபல நடிகை  விஜி சந்திரசேகர் இவருடைய  மூத்த மகள் சுரக்ஷாவுக்கு இன்று  திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.   ஏராளமான திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். இவர்  1981ல்  இயக்குனர் கே.பாலச்சந்தரின்  'தில்லு முல்லு' திரைப்படத்தில்  அறிமுகமானார். இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.  இந்த படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புக்களை விஜி சந்திரசேகர் மறுத்ததாக கூறப்படுகிறது.   அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம்,   மலையாளம்  என  தென்னிந்திய மொழிகளில் நடிக்கத் தொடங்கினார்.  

விஜி சந்திரசேகர்
'தில்லு முல்லு' வுக்கு பின்  பாரதிராஜாவின் 'கிழக்கு சீமையிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து  தரமான குணசித்ர வேடங்களை தேர்வு செய்து நடித்து  வருகிறார். அதன்படி பிரியங்கா, தேவி ஐஏஎஸ், பார்த்தாலே பரவசம், சமஸ்தானம், ஆயுத எழுத்து, ஜோர், அரோகணம் என  பல படங்களில் இவருடைய நடிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  சமீபத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் டி என் ஏ, இயக்குனர் கோபி நயினார் இயக்கி வரும் திரைப்படம் என இவரின் கைவசம் பல படங்கள் உள்ளன.சின்னத்திரையில்  சந்திரகுமாரி சீரியலில், ராதிகாவுக்கு பதில்   விஜி  சந்திரசேகர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

விஜி சந்திரசேகர்

இவருக்கு 1995ல்  சந்திரசேகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திரைத்துறையுடன்  தன்னுடைய கணவரின் தொழிலையும் கவனித்து வருகிறார். இவர்களுக்கு  லவ்லின், சுரக்ஷா என இரண்டு மகள்கள். 2 வது மகள் லவ்லின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மூத்த மகள்  சுரக்ஷாவுக்கு தற்போது தொழிலதிபருடன் திருமணம் நடந்துள்ளது.   இந்த  திருமணத்தில்  80ஸ் கதாநாயகிகள் சீதா, ராதிகா, ஜெயஸ்ரீ ,  நடிகர் சூர்யா, அருண் விஜய், சமுத்திரகனி, மோகன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.   இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில்   வைரலாகி வருகிறது. இவர்களுக்குவாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web