திரையுலகில் அதிர்ச்சி.... பிரபல திரைப்பட இயக்குநர் மனைவியுடன் படுகொலை!!

 
டானிஷ்

பிரபல ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் டாரிஷ் மெர்ஜி. இவர், 'டைமண்ட் 33', 'தி கவ்', 'மிஸ்டர் நெயிவ்', 'தி லாட்ஜர்ஸ்', 'சாரா'  படங்கள் இவருடைய இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன.  டாரிஷ் மெர்ஜி, தன்னுடைய படங்கள் மூலம்  பல புரட்சிகரமான கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்தவர்.  இவர்  பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஈரானில் உள்ள கராஜ் நகரில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.  

டானிஷ்

டாரிஷ் மெர்ஜியுடன் வசித்து வந்த  மனைவி வஹிதா முகமதுவும், அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதற்கான காயங்கள் உடல் முழுவதும் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  கராஜில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இவருடைய மகள் மோனா மெர்ஜி   தற்செயலாக தனது பெற்றோரைக் காண்பதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார்.

அமெரிக்கா போலீஸ்

அப்போது, தனது பெற்றோர் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இச்சம்பவம்  குறித்து   ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக   வஹிதா முகமதிபார் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web