26 வயசு தான் ஆச்சு .. பிரபல கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மிதுல்

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனை  வயலட்டா மிதுல் . இவருக்கு வயது 26.  மிதுல் மால்டோவாவின்  தேசிய அணிக்காகவும், ஐஸ்லாந்து நாட்டின் கிளப் கால்பந்து அணிக்காகவும் விளையாடி வந்தார். இதுவரை 40 சர்வதேச போட்டிகளில் மிதுல் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.


 


செப்டம்பர் 4ம் தேதி மிதுல்  தமது சக கால்பந்து வீராங்கனையுடன்  ஐஸ்லாந்தில் உள்ள வாப்னாப்யூர் மலைத்தொடரில், மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அவரது உடலை மீட்டனர். 

மிதுல்


இவரது கோர மரணம் குறித்து   ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மால்டோவா கால்பந்து அணி நிர்வாகம்  இரங்கலை பதிவிட்டுள்ளன.   கால்பந்து ரசிகர்கள் இவரது உயிரிழப்பிற்கு இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web