பிரபல கிதார் கலைஞர் ஜோஸ் தாமஸ் காலமானார்... விமானத்திலேயே உயிரிழந்த சோகம்!

 
ஜோஸ்
 

பிரபல கிதார் கலைஞர் ஜோஸ் தாமஸ் புதூர் (54) திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விமானத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். கேரள மாநிலம் மணிகண்டேஸ்வரம் புதூர் வீட்டில் (சி5) வசித்து வந்தவர் ஜோஸ் தாமஸ். தென்னாப்பிரிக்காவில் இருந்து திருவனந்தபுரம் வந்துக் கொண்டிருந்தார்.  நேற்று மாலை 3 மணியளவில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி விமானத்தில் பயணம் செய்த அவர் விமான பயணத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார்.

ஜோஸ்

ஜோஸ் தாமஸின் மகன் உடனடியாக கேபின் குழுவினரை இது குறித்து எச்சரித்ததும், அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
விமானம் தரையிறங்கியதும், ஆம்புலன்சில் சாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆம்புலன்ஸ்

ஜோஸ் தாமஸ் திரையுலகில், கே.ஜே.யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளில் கிதார் இசைத்து வந்துள்ளார். 2010ல் 'ஐடியா ஸ்டார் சிங்கர்' உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமானவராக இருந்தார்.  தனது மகன்களுடன் சேர்ந்து 'நாதபிரம்மம்' இசைக் குழு மற்றும் ஜாமர் என்ற இசைக்குழுவில் இயங்கி வந்தார். ஜோஸ் தாமஸ் மனைவி மின்னி ஜோஸ், மற்றும் மகன்கள் விசைப்பலகை கலைஞரான அமல் மற்றும் கிதார் கலைஞரான எமில்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web