42 வயதில் சூர்யா பட ஹீரோயின் விவாகரத்து... அதிர்ச்சியில் ரசிகர்கள்... !

 
ஈஷா

தமிழ் திரையுலகில் ஆய்த எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் ஈஷா தியாஒ. இவர் பிரபல நடிகை ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா நட்சத்திர தம்பதிகளின் மகள். இவர் 2002 ல்  பாலிவுட்டில் அறிமுகமாகி   ஹரித்திக் ரோஷன், ஷாருக்கான் என   முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.   ஹிந்திப்படங்களில்  மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவர்  2012ல்   பாரத் தக்தானி என்கிற இளம் தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஈஷா

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டு வாழ்த்தியது. இவர்களின் காதல் வாழ்க்கையின் சாட்சியாக இவர்களுக்கு   ராத்யா மற்றும் மிராயா என 2 மகள்கள்.  இவர் திருமணத்திற்கு பிறகு சில வெப் சிரீஸ்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து பகீர் கிளப்பியுள்ளார்.  இது குறித்து வெளியிட்ட  அறிக்கையில் “நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்லலாம் என முடிவு எடுத்துள்ளோம்.

ஈஷா

அதே நேரத்தில் எங்களின் குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருப்போம் “ எனத் தெரிவித்துள்ளார்.  ஈஷா மற்றும் பாரத் விவாகரத்து பெற உள்ளதாக சில தகவல்கள் பாலிவுட் திரையுலகில்  வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக  திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க