19 வயசுல பரிதாபம்... பிரபல இன்ஸ்டா பிரபலம் திடீர் மரணம்!!

 
மரியா

மிக இள வயது மரணங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிய போது மரணம், உடற்பயிற்சியின் போது மரணம் மணமேடையில் மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து சாவு, கூட்டத்தில்  மாணவி மயங்கி சரிந்து பலி  என தொடர்கதையாகி வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மிக இளவயது மரணங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாறி வரும் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை என எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும் இளவயது திடீர் மரணங்கள் மிகக் கொடுமையே. அந்த வகையில் 19 வயதான இன்ஸ்டா பிரபலம் திடீரென உயரிழந்தார். .

இன்ஸ்டா உட்பட சமூக வலைத்தளங்களில்  பிரபலமாக திகழ்ந்தவர்  மரியா சோபியா வலிம். பிரேசில் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 19 தான். இவர் தன்னுடையா  இன்ஸ்டா பதிவில்  தன்னுடைய தினசரி உடற்பயிற்சி தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து வந்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் தேடப்படும் அளவுக்கு பிரபலமானார்.

சோபியா

மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் ஃபாலோயர்களிடம் பேசுவார். இன்ஸ்டாவில் அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
 மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.

rip

ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார். சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும்அவரது தந்தை உறுதி செய்துள்ளார். வெறும்  19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில்  அவரது ஃபாலோயர்கள் பெரும் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web