தமிழில் பிரபல மலையாளத் திரைப்படம் ”பிரேமலு” ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
பிரேமலு

 

 
தமிழகத்தில் இன்று  பிரேமலு திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களின் புது படங்கள் இல்லாத காரணத்தினால் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.  பிரேமலு படத்தை மார்ச் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில் களம் இறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.  மலையாள சினிமா  என்றாலே ஃபீல் குட் மூவிஸ் என்ற பிம்பம் சமீபகாலமாக திரையுலகில் உருவாகியுள்ளது. இத்திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.   மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.  


பிரேமம், ஹிருதயம்,மின்னல் முரளி, ஐயப்பனும் கோஷியும் என பல படங்கள் இந்த வரிசையில் இணைந்து கொண்டே உள்ளன. அப்படி ஒரு படம் தான் பிரேமலு திரைப்படம்.  இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென்  இணைந்து நடித்த படம் பிரேமலு.  மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம்  பிப்ரவரி  9 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிபெரும் வரவேற்பை பெற்றது.  தண்ணீர் மாத்தன் தினங்கள் மற்றும் சூப்பர் சரண்யா போன்ற வெற்றி படங்களின்  இயக்குநர்  கிரீஷ் ஏ.டி. இந்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.  ரோம்-காம் வடிவில் உருவாகி உள்ள இந்த மலையாளத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

பிரேமலு


நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேமலு படம் தற்போதைய சினிமா உலகில் வெளியாகியுள்ள வித்தியாசமான காதல் திரைப்படம்  .  பல இளைஞர்களின் மனதை கட்டி போட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.  இதய பூர்வமான படமாகவும் ஒரு தரமான சினிமா அனுபவத்தை தரும் என்கின்றனர்  சினிமா பிரியர்கள்.   வசீகரிக்கும் கதை களத்தை கொண்டிருக்கும் பிரேமலு படம் நகைச்சுவையுடன் நல்ல காதல் கதையையும்  அமைந்துள்ளது.   நஸ்லென் கஃபூர் மற்றும் மமிதா பைஜு   இடையில் நடக்கும் அழகான காதல் ரசிகர்களுக்கு புதுவித சினிமா அனுபவத்தையும்,  சிரிப்பையும் வர வைக்கிறது.
 இலட்சியங்களுக்கும்   காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ரீனுவாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம்  ரசிகர்களை கொள்ளை கொள்கிறது.   நஸ்லன் கஃபூர் சச்சினாக  இயல்பான, அழகையும் அப்பாவித்தனத்தை திரையில் காட்டியுள்ளார்.   இந்தப் படம் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web