பிரபல போஸ்டர் வடிவமைப்பாளர் காலமானார்.. திரையுலகில் சோகம்!!

 
ஷேக் தாவூத்

பிரபல திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளர் ஷேக் தாவூத் காலமானார். இவருக்கு வயது 73. இவர் கடந்த சில  நாட்களாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஷேக் தாவூத் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

போஸ்டர் மேக்கர்
இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ் உட்பட   பல திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர்.  

rip

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web