20 வயசு தான்... பிரபல தயாரிப்பாளர் மகள் புற்றுநோயால் காலமானார்!
பிரபல நடிகர் கிரிஷன் குமாரின் மகள் திஷா. இவருக்கு வயது 20 மட்டுமே. திஷா நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பிரபலங்கள் உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2003ல் திஷா கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங்கின் மகளாக பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Excited to be a part of this stellar team and grateful for this opportunity from @ImproveDX!! https://t.co/7CsERUxdsg
— Disha Kumar (@Disha_KumarMD) September 30, 2022
Excited to be a part of this stellar team and grateful for this opportunity from @ImproveDX!! https://t.co/7CsERUxdsg
— Disha Kumar (@Disha_KumarMD) September 30, 2022
திஷாவின் குடும்பம் சினிமாவில் பிரபலமாக இருந்த போதும், திஷா திரைப்பட விழாக்களிலோ, பொது நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டது இல்லை.
நீண்ட நாட்களாக கேன்சரால் போராடிக்கொண்டிருந்த திஷா குமார் நேற்று உயிரிழந்தார். இவரின் அகால மரணம் குறித்து குடும்பத்தினர் ”அவர் புற்று நோயுடன் போராடி வந்தார். அதற்கான சிகிச்சை எடுத்து வந்த போதும், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் கிரிஷன்குமார்.

இவர் தயாரிப்பாளரும் கூட சனம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான கிரிஷன் குமார் தனது மருமகன் பூஷன் குமாருடன் இணைந்து டி-சீரிஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இருவரும் இணைந்து லக்கி: நோ டைம் ஃபார் லவ், ரெடி, டார்லிங், ஏர்லிஃப்ட் மற்றும் சத்யமேவ் ஜெயதே என பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ளனர். கார்த்திக் ஆரியன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பூல் புலையா 2 படத்தையும் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படம் 2022 ல் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதில், கியாரா அத்வானி நடித்தது மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இது தவிர, ரன்பீர் கபூரின் அனிமல் படத்தையும் கிரிஷன் மற்றும் பூஷன் இணைந்து தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
