தேசிய விருதுபெற்ற பிரபல தயாரிப்பாளர் காலமானார்... திரையுலகில் சோகம்..!!

 
கங்காதரன்

பிரபல   திரைப்பட தயாரிப்பாளர்  பி.வி.கங்காதரன். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக  கடும் அவதிப்பட்டு வந்தார். தற்போது சிகிச்சைபலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 80. சில நாட்களுக்கு முன்னதாக இவருடைய  உடல்நிலை மிகவும் மோசமானதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி  இன்று காலை 6 மணிக்கு  காலமானார். 

கங்காதரன்
 மலையாளத்திரையுலகில்  கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் புரோடக் ஷன் என்கிற 20க்கும் மேற்பட்ட பல மலையாள படங்களை தயாரித்துள்ளார். 'ஒரு வடக்கன் வீரகதா', 'அசுவிண்டே அம்மா', 'தூவல் கொட்டாரம்' மற்றும் போன்ற படங்கள்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தயாரிப்பாளராக  2  தேசிய திரைப்பட விருதுகளையும், ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

rip

திரைத்துறையை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதித்துள்ளார். இவர்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்களும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web