பிரபல ரவுடி பூச்சி சுதாகர் வெட்டிக்கொலை!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர் .இவருக்கு வயது 42. இவர் பேரில் அந்த பகுதியில் பல்வேறு திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் வசித்து வரும் தனது கூட்டாளி அர்ஜுன் ராஜுவுடன் அரிவாள், மிளகாய் பொடி இவைகளை மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர். சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தான். வெளியில் வர வைப்பதற்காக வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர். அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனையடுத்து வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர்.
இதில் ஓடுகள் உடைந்து விழத் தொடங்கின. வீட்டிலிருந்தவர்களை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார். தயாராக இருந்த பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுதாகரின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!