பிரபல சீரியல் நடிகை திருமண நிச்சயதார்த்தம்... வைரலாகும் புகைப்படங்கள்...!!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர் அரவிஷ் ஹரிகாவை காதலித்து வந்தார். நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன. இந்த ஜோடி ஷபானா - ஆர்யன் போல் ரேர் ஜோடி தான். ஆல்யா மானசா - சஞ்சய், சித்து ஸ்ரேயா, மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, மஹாலட்சுமி - தினேஷ் என பல ஜோடிகள் ஒரே சீரியலில் நடித்து பின்னர் காதலிக்க துவங்கி திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இப்படி சின்னத்திரை ஜோடிகள் லிஸ்ட்டில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பவர்கள் அரவிஷ் - ஹரிகா ஜோடி. அரவிஷ், ஒரு டான்சராக 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் தொடங்கி சுந்தரி, இலக்கியா, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சன் டிவி 'திருமகள்' சீரியலில் நடித்து வந்த, ஹரிகா சாதுவும் காதலித்து வந்த நிலையில், இந்த ஜோடி தற்போது இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் குறித்த, சில போட்டோக்களை இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டசில் வெளியிட்டுள்ளனர். இந்த ரியல் ஜோடிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!