36 வயசு தான்... பிரபல பாடகி திடீர் மரணம்... இசைப் ப்ரியர்கள் அதிர்ச்சி....!!

 
ஜஹாரா

தென்னாப்பிரிக்காவின்  பிரபல பாடகி  ஜஹாரா. புலேல்வா ம்குடுகானா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இவர்  பாடலாசிரியரும் கூட. இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருக்கு வயது 36.  இவ் துரதிர்ஷ்டவசமாக அவர் டிசம்பர்   11ம் தேதி காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த  சில வாரங்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை காரணமாக ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

ஜஹாரா

அங்கு அவருக்கு தீவிர ர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.ஜஹாரா நவம்பர் 9, 1987 அன்று தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் பிறந்தவர். இவர் மிகச் சிறு வயதிலிருந்தே இசை மீது அதீத ஆர்வத்தில் இருந்தார். அப்போதிருந்தே தனது இசைத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அதுமுதல் தானே   கித்தாதார் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். 2011 ல்  ஜஹாராவின் முதல் ஆல்பம் வெளியானது. இந்த ஆல்பம் மக்களிடையே வெகுவாக பிரபலமாகியது.  ஜஹாராவின் வலுவான பாடலும் அர்த்தமுள்ள பாடல் வரிகள் தென்னாப்பிரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை ரசிகர்களை ஈர்த்தது. இதனையடுத்து அவர் 5  வெற்றிகரமான ஆல்பங்களை உருவாக்கி உள்ளார்.

ஜஹாரா

இந்த ஆண்டின் சிறந்த பெண் கலைஞருக்கான தென்னாப்பிரிக்க இசை விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சாதனை படைத்தவர்.  இவர்  இசை ரசிகர், திறமையான கலைஞர், இசைப்பிரியர், சமூகத்தின் நேசத்துக்குரியவராக இருந்ததன் மூலம் உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரது திடீர் மறைவு உலகம் முழுவதும் இசை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு இசை ரசிகர்கள், பிரபலங்கள், உறவினர்கள்,  நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web