பிரபல விக்கெட் கீப்பர் திடீர் ஓய்வு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
குயிண்ட்டன் டிகாக்

தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குயிண்ட்டன் டிகாக் . இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போத் ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் விடைபெறப்போவதாக அறிவித்துள்ளார். இத்தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரக்க அணியில் இருந்த ஜாம்பவான்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வருகின்றனர்.அந்த வகையில் தற்போது குயிண்ட்டன் டிகாக்கும் ஓய்வை அறிவித்துள்ளார்.   இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் அவர் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள் தொடரில் இருந்தும் ஒய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

குயிட்டன் டிகாக்

 இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் “ குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க போகிறேன். இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.  தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரரான டிகாக்  குறைந்த வயதில் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை   ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web