சச்சின்.. “பிரச்சனைகளை மறந்துடுங்க... உடனே காப்பாத்துங்க...” காம்ப்ளியின் வீடியோவைப் பகிர்ந்து ட்விட்டரில் கதறும் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், 52 வயதான வினோத் காம்ப்ளி நிற்கவும், நடக்கவும் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அந்த வழியே செல்லும் வழிப்போக்கர்கள் சிலர் அவர் இலக்கை அடைவதற்கு கைத்தாங்கலாக அவரை நடக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும், காம்ப்ளியால் நடக்க முடியவில்லை.
காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பது குறித்து கவலையடைந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரது நெருங்கிய நண்பரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரை உதவி செய்யுமாறு டேக் செய்து வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலான அந்த வீடியோவில், பார்வையாளர்கள் அவரது உதவிக்கு விரைவதற்குள் காம்ப்ளிலி தெருக்களில் நிற்பதற்கே தடுமாறிப் போராடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இயலவில்லை. அந்த வீடியோவில் இருப்பது காம்ப்ளி தானா என்பதையும் சரிபார்க்க இயலவில்லை.
கடந்த 10 வருடங்களாகவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி பல உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். கடந்த 2013ல் மும்பையில் கார் ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, அவருக்கு இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் காம்ப்ளியின் நண்பர் சச்சினை டேக் செய்து, அவருக்கு உதவுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
Sad look at Vinod Kambli’s condition He was once among best batters/fielders in 🇮🇳 cricket team Bad luck/lifestyle is the apparent cause of his present state of health His pal 'Bharat Ratna' Sachin Tendulkar & BCCI shd help in his best possible rehabilitation fast ✅☝️ pic.twitter.com/ZVSC2fpeTl
— G M A PRABHU (@GMAPRAPRABHU1) August 5, 2024
காம்ப்ளியுடனான சச்சின் நட்பு:
சச்சினும், காம்ப்ளியும் 10 வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள், இருவரும் மறைந்த ரமாகாந்த்தால் கிரிக்கெட்டில் வழிகாட்டப்பட்டவர்கள். பின்னர் இருவரும் சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்கள்.
நவம்பர் 1989ல் சச்சின் இந்தியாவுக்காக அறிமுகமானார், அதன் பின்னர் 2 வருடங்கள் கழித்து 1991ல் ஷார்ஜாவில் நடந்த ஒருநாள் போட்டியில் காம்ப்ளி முதல் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து விளையாடினார். ஒட்டுமொத்தமாக, காம்ப்ளி 1991 மற்றும் 2000 க்கு இடையில் 104 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். 32.59 சராசரியில் 14 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 2477 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.20 சராசரியில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 1084 ரன்கள் எடுத்தார்.
கடைசியாக 1995ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி, 24 வயதாகும் முன், 2000ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட அணிக்கு திரும்ப அழைக்கப்படவில்லை. 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் பின்னர் 2011ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக காம்ப்ளி அறிவித்தார்.
மறுபுறம், சச்சின் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 34,000 சர்வதேச ரன்களுக்கு மேல் அடித்தார். சதம் மற்றும் 164 அரைசதங்களுடன். 2013ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
