ரசிகர்கள் கொண்டாட்டம்... தனுஷின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகிறது ‘புதுப்பேட்டை’

 
புதுப்பேட்டை
 

தனுஷின் பிறந்தநாளான ஜூலை 26ம் தேதி ‘புதுப்பேட்டை’ படம் ரீ-லீஸாகிறது. ‘புதுப்பேட்டை’ படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் இருந்த எதிர்பார்ப்பும், வரவேற்பையும் விட இப்போது உள்ள தலைமுறையினர்  ‘புதுப்பேட்டை’ படத்தின் மீது பாசிட்டிவ் விமர்சனங்களை வைத்து, பார்ட்-2 எப்போது எடுப்பீங்க சென்று இயக்குநர் செல்வராகவனை ஒவ்வொரு சந்திப்பின் போதும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் ‘புதுப்பேட்டை’ படம் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 26ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. 

புதுப்பேட்டை


தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. 
இன்னொரு பக்கம் பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன, அந்த வகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அதே ஜூலை-26ஆம் தேதி தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது. ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும் பிரபல விநியோகஸ்தருமான மதுராஜ் இந்தப்படத்தை தமிழகமமெங்கும் வெளியிடுகிறார். சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பில்லா-2’ படத்தையும் இவர் தான் ரீ ரிலீஸ் செய்திருந்தார்.

அதிர்ச்சி!தனுஷ் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் குண்டு வீச்சு!


2006ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’, ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்க போகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web