அசத்தல்... சொந்தமாக கால்பந்து க்ளப் வாங்குகிறார் ரொனால்டோ... உற்சாகத்தில் ரசிகர்கள்!

 
ரொனால்டோ

சவுதி அரேபிய கால்பந்து கிளப் அன் நாசருடன் ரொனால்டோவின் ஒப்பந்தம், ஆண்டுக்கு 20 கோடி யூரோ மதிப்புடையது. கால்பந்து வரலாற்றில் மிக அதிக ஊதியம் பெறும் வீரராக இந்த ஒப்பந்தம் அவரை மாற்றியுள்ளது. ரொனால்டோ 2025ஆம் ஆண்டு ஜூன் வரை சவுதி அரேபிய கிளப் அணியான அல் நாஸருடன் ஒப்பந்தத்தில் உள்ளது. தனது 38 வயதிலும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். வயது ஏறிக்கொண்டே செல்வதால் அவரது ஓய்வு குறித்த பேச்சு அண்மைக்காலமாக ஒலித்துக்கொண்டே வருகிறது.


எனினும் அவர் தனது நாடு மற்றும் கிளப் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது ஓய்வு, எதிர்கால திட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ரொனால்டோ. அதிகபட்சம் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவேன். அதன்பிறகு, ஒரு கால்பந்து கிளப்பை சொந்தமாக வைத்திருக்கும் யோசனையில் உள்ளதாக கூறினார்

சில ஆண்டுகளாகவே, ஒரு கிளப் அணியை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகவும், நான் தற்போது எனது கால்பந்து விளையாட்டின் முடிவில் இருக்கிறேன், அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்தான் எல்லாம் என தெரிவித்தார்.

ரொனால்டோ

இதற்கிடையில், மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஜனவரி மாதம் அல் நாசருக்கு கையெழுத்திட்ட ரொனால்டோ, முன்னாள் ரியல் மாட்ரிட் அணி வீரர் கரீம் பென்சிமா சவுதி புரோ லீக்கில் சேரும் முடிவை வரவேற்றார். பிரான்ஸ் வீரர் பென்சிமா (35) மாட்ரிட் உடனான தனது ஒரு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பை ரத்து செய்து சவுதி சாம்பியன் அல் இத்திஹாத் அணியில் இணைந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web