விவசாயிகளே காத்திருங்க... வேளாண்துறை அமைச்சரின் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணத்திட்டத்தால் வெளியாக காத்திருக்கும் குட்நியூஸ்!

 
விவசாயம்

 
 
தமிழகத்தில்  விவசாயத்துறையில் உழவர் நலன் சார்ந்த வேளாண் தொழில்நுட்ப ஆய்வுகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து   தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக வேளாண்துறை குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின்  பயணம் குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் ஊரடங்கிலும் தொய்வின்றி தொடரும் விவசாயம்!

அந்த அறிவிப்பில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்த  ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வேளாண் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின்  தலைமையில்  வேளாண்துறை குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளது.  
இந்தக் குழுவில் வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் உட்பட பல  உயர் அதிகாரிகள் உள்ளனர். இதன்  முதற்கட்டமாக நேற்று ஜூலை 24ம் தேதி  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில்  பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப பங்குகள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.  

ஸ்டாலின் விவசாயம்
இந்த கலந்துரையாடலில் தமிழகத்தில் நிலவும் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், வேளாண்மை உழவர் நலத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல்,  அறுவடைக்கு பிறகு  மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் அனைத்தும்  விவாதிக்கப்பட்டன.இந்த கருத்து பரிமாற்றங்கள் முதல்வரின் ஆணைக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் என  வேளாண்துறை சார்பில் வெளியான அரசு செய்திக்குறிப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!