ஓடும் ரயிலில் ஃபேஷன் ஷோ..!! ஹாட் வீடியோ!!

 
ரயிலில் பேஷன் ஷோ

புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் விழாக்களுக்கு பேஷன் ஷோ என்பர் . அதாவது இதுவரை வழக்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதே இதன் இலக்கணம் . பேஷன் ஷோக்கள் பிரம்மாண்ட அரங்கங்களில் கண்ணைக்கவரும் வகையில் நடத்தப்படுவது வாடிக்கை தான்.  இந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வளரும் ஃபேஷன் கலைஞர்கள் ஒன்றிணைந்து வித்தியாசமான ஃபேஷன் ஷோவை அரங்கேற்றி உள்ளனர்.  


ஓடும் மெட்ரோ ரயிலில், இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் இவைகளுடன் நவீனத்தையும் சேர்த்து ஃபேஷன் ஷோவை மெட்ரோ ரயிலில் நடத்திக் காட்டினர். இந்த ஃபேஷன் ஷோவில்   5 வயது முதல் 50 வரையிலான பெண்கள் பலரும், விதவிதமான ஆடைகளில் மெட்ரோ ரயில் பெட்டிகளில்  நடைபோட்டார்கள்.இதை பார்த்த மெட்ரோ ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அதை ரசிக்க தொடங்கினர்.  கேட்வாக் பூனை நடைபோட்டவர்களில் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் வரவேற்பு பெற்றனர்.  டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களின் நெட்டிசன்கள், நாக்பூர் மெட்ரோ ரயில் ஃபேஷன் ஷோவை கிண்டலடித்தனர்.

ரயிலில் ஃபேஷன் ஷோ

வளரும் நகர பின்னணியை சேர்ந்தவர்கள், நாக்பூரின் ஃபேஷன் கலைஞர்களை வரவேற்று பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். நாக்பூர் மெட்ரோ நிர்வாகம் கட்டண அடிப்படையில் ஓடும் ரயிலில் புதுமையான நிகழ்வுகளை அரங்கேற்ற அனுமதித்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொண்ட நாக்பூர் வளரும் ஃபேஷன் கலைஞர்கள் இன்று இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து பல முண்ணனி நகரங்களின்  மெட்ரோ ரயில் நிர்வாகங்களும், இதுபோன்ற ஃபேஷன் ஷோக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web