அண்ணாமலை அக்டோபர் 16ல் உண்ணாவிரத போராட்டம்!!

 
ஸ்டாலின் அண்ணாமலை

காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவை கண்டித்து தமிழக பாஜக சார்பில் அக்டோபர்  16ம்தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "2018ல்   மோடி  முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த 5 ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டது. தற்போது   காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர்.  தன் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு தான்.  

அண்ணாமலை


சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்  திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் பேசியபோது, அவரை முழுவதுமாகப் பேச விடவில்லை.   சட்டமன்றத்தில் திமுகவின் வரலாற்றுப் பிழைகளும், ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அனைத்தும் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம்.   விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகம், கேரளா, கர்நாடகா   மாநிலங்களிடையே நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, 50  ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பது உறுதி. இதற்கான தீர்வை யோசிக்காமல்   வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.

ஸ்டாலின் அண்ணாமலை

கர்நாடகா அணைகளில் 80%-த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும்  ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறம் இல்லாமல் நடத்துகிற ஆட்சியும், தீர்மானமும் போராட்டமும்  கண்டனத்துக்குரியது.   கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையை மட்டுமே  காட்டுகிறது.  பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில்,  அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமையன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web