வாகன ஓட்டிகளே உஷார்... 'ஃபாஸ்ட்டேக்' ஸ்டிக்கர் ஒட்டல்லன்னா இரு மடங்கு கட்டணம்!

 
பாஸ்ட் டேக்

 

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஃபாஸ்ட்டேக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்களின்  முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக்

இது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாத வாகனங்களுக்கு  இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம். பல வாகன ஓட்டிகள் காருக்குள் ‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்கும்போது மட்டும் அதைக் கையில் எடுத்து முன்பக்கக் கண்ணாடியில் காட்டுகின்றனா். இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

சுங்கச்சாவடி

இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மடங்குக் கட்டணம் குறித்த  அறிவிப்பை சுங்கச் சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும். ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை காரின் முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!