போதையில் பெற்ற மகளையே அடித்து கொன்ற தந்தை.. உடலின் பாகத்தை மறைக்க செய்த கொடூரம்..!

 
ஆடம் மாண்ட்கோமெரி

ஆடம் மாண்ட்கோமெரி நியூ ஹாம்ப்ஷயரை சேர்ந்தவர். இவர் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். போதைப்பொருள் அடிமையால், அவர் தனது குடும்பத்தை புறக்கணித்து, ஊதாரித்தனமாக இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அமெரிக்காவில் வீடற்றவர்கள் பெரிய கார்களில் வாழ்வது வழக்கம். கார் வீட்டில் வசித்து வந்த அவர், தனது 5 வயது மகளை அடித்துக் கொன்றார். காரை அழுக்கு செய்ததற்காக குடிபோதையில் பலமுறை கத்தியால் குத்தியதால் சிறுமி அழுது கொண்டே உயிரிழந்தார்.

US man accused of punching 5-year-old daughter to death and carry her body  to restaurant where he worked - Times of India

அவரது மகள் இறந்த பிறகு, ஆடம் உடலை மறைக்க பல நாட்கள் முயற்சி செய்தார். அவர் குழந்தையின் உடலை ஒரு பையில் பதுக்கி பல இடங்களில் பதுக்கி வைத்திருந்தார், மேலும் அது அழுகத் தொடங்கியபோது சடலத்தின் வாசம் வெளிப்பட்டது. வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இறந்த உடலை தகனம் செய்ய முடிவு செய்தார். சிறுமியின் உடலை சிறு துண்டுகளாக வெட்டி, தினமும் தான் வேலை செய்யும் உணவகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு உடல் வாசம் வராமல் இருக்க ஒரு பெரிய கொள்கலனில் பையை வைத்துள்ளார்.

பின்னர், மகளின் உடலின் பாகத்தை முந்தைய நாள் குப்பை என்ற பெயரில் உணவகத்தின் குப்பையில் கலந்து விட்டுள்ளார்.இப்படியே தினமும் உடலின் பாகத்தின் குப்பையில் கொட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். உணவகத்தின் ஊழியர்களும் வழக்கமான வாடிக்கையாளர்களும் ஆடம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனர். ஆடம் கைதான பிறகுதான் அந்த பையில் மறைந்திருந்த சோகம் அவர்களுக்கும் தெரியவந்தது.

ஆடம் - ஹார்மனி;
கொலைகார தந்தையும் பலியான சிறுமியும்

ஆடமின் மகள் காணாமல் போய் 2 ஆண்டுகள் ஆகியும் இந்த கொடூரமான பின்னணியை போலீசார் அறியவில்லை. ஆடம் கைது செய்யப்பட்ட பிறகு ஆடமின் பிரிந்த மனைவி கெய்லா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அவரை காக்க நீதிமன்றத்தில் பொய் சொன்ன ஆடமின் இரண்டாவது மனைவி கைலாவையும் கைது செய்தனர். கெய்லாவுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; கொடூரமான கொலை, ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆதாரங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஆடமுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web