6 வயது மகளை கொலை செய்து தந்தை தற்கொலை!! ஆன்லைன் மோகத்தால் விபரீதம்!!

 
மானசா

சென்னை அயனாவரம் பூசனம்தெருவில் வசித்து வருபவர்   கீதா கிருஷ்ணன்.இவர்   இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார்.  இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.ஆகஸ்ட் 23ம் தேதி புதன்கிழமை   இரவு கீதா கிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் கண்டறியப்பட்டார்.  வீட்டிற்குள் மானஸா இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து   இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன்


இதுகுறித்து போலீஸார் ”   கீதா கிருஷ்ணன் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் அதை சமாளிக்க  பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி கல்பனாவுக்கும், கீதாகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.   2020-ல் அவர்கள் கோட்டூர்புரத்தில் வசித்தபோது, கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார். தனதுமூத்த மகள் குணாலினியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் .  மனைவி கல்பனா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், திடீரென மனம் மாறிய கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானஸாவுடன் தலைமறைவாகி விட்டார்.  தனிப்படை அமைத்து போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர்.  

மாணவர் தற்கொலை
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த கீதா கிருஷ்ணன், இளைய மகள் மானஸாவுடன் அயனாவரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டில்   பணத்தை இழந்து கடனாளியானார். இப்போது  இளைய மகள் மானஸாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web