மகனிடம் வீடியோ காலில் பேசிய போதே கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தந்தை!

 
கடல்


மும்பை காட்கோபர் பகுதியில் வசித்து வருபவர் பவேஷ் சேத் . இவர்  பேரிங் ஷாப் ஒன்று வைத்து கடை நடத்தி வந்தார்.  சம்பவ நாளில்   ஒரு பாலத்தில் நின்று கொண்டு அவர் தனது மகனுக்கு வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார்.  தந்தையிடம் பேசிய மகன் அவர் பாலத்தில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அது குறித்து விசாரித்து கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

இதற்கு பதில் அளித்த தந்தை தனக்கு  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகமானதால் தான் தற்கொலை செய்யப் போவதாக மகனிடம் நேரலையில் கூறினார். கொஞ்சம் பொறுங்கள் அப்பா என மகன் கூறும் வரை கூட கேட்கவில்லை. அடுத்த நொடியே அவர் பாலத்திலிருந்து கடலுக்குள் குதித்தார். இதனால் பதறிப்போன மகன் உடனே காவல்துறையினிடம் புகார் அளித்தார்.

போலீஸ்

அதன்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று அவரை தேடத்தொடங்கினர்.  3 மணி நேரம் தொடர் தேடுதலுக்குப் பின்பு அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!