மகன்கள் கண் எதிரிலேயே ராட்சத அலையில் சிக்கி தந்தை மாயம்... தேடுதல் பணிகள் தீவிரம்!

 
கண்னன்
மனைவி கண் எதிரிலேயே மகன்களுடன் கடலில் குளித்த போது பரிதாபம் ராட்சத அலையில் சிக்கி தந்தை மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர் பகுதியில் கடலில் மகன்களுடன் குளித்துக் கொண்டிருந்த தந்தை ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அவரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

சென்னை எர்ணாவூர், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(41). கூலி தொழிலாளியான இவரது மனைவி பிரியா(32).  இவர்களுக்கு தர்ஷன்(14), நித்திஷ்(8) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், கண்ணன் குடும்பத்தினருடன்,  திருவொற்றியூர் கடற்கரைக்கு சென்றார். மகன்கள் இருவருடன் சேர்ந்து, கண்ணன் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மனைவி மற்றும் மகன்கள் கண் முன்னே கண்ணன் கடலில் மூழ்கி மாயமானார்.

கடல்

இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், எண்ணூர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலில் மாயமான கண்ணனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!