பகீர்... வீட்டில் ரூ500 காணல... 10 வயது மகனை இரும்புக் கம்பியால் அடித்தே கொலை செய்த தந்தை!
உத்தர பிரதேச மாநிலத்தில் காஷ்யபத் பகுதியில் வசித்து வருபவர் நவ்ஷத் – ராசியா தம்பதி. நவ்ஷத்தின் 10 வயது மகன் ஆத். இதில் நவ்ஷத் மற்றும் ராசியா தங்கள் வீட்டில் வைத்திருந்த ரூ500 காணாமல் போனதாக தேடினர். வீடு முழுக்க தேடிப்பார்த்த பிறகு ரூபாயை காணவில்லை. இதனையடுத்து அந்த பணத்தை சிறுவன் ஆத் தான் எடுத்து இருக்க வேண்டும் என சந்தேகம் அடைந்தனர்.
இதனால் நவ்ஷத் பெற்ற மகன் என்று கூட பாராமல் ஆத் மீது இரும்பு கம்பியால் கடுமையாக தாக்குதல் நடத்தினார். சிறுவன் அலறி துடித்தும் அடிப்பதை நிறுத்தவே இல்லை. ஒரு கட்டத்தில் நவ்ஷத் சிறுவனின் தலையில் அடிக்க அந்த இடத்திலேயே ஆத் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுவன் ஆத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் நவ்ஷத் மற்றும் ராசியா இருவரும் சிறுவனை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதன் பேரில் கணவன் மனைவி இருவரையும் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!