தந்தையே 2 குழந்தைகளை தலையணையை அமுக்கி கொலை !! பகீர் வாக்குமூலம்!!

 
சரிதா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா. இருவருக்கும்  10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு,  கேசவ் என 2 மகன்கள்.இதில் மூத்தவன் 4ம் வகுப்பும், இளையவன் 1வது வகுப்பும் படித்தனர்.   கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.  

கணவன் மனைவி

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால்,  ஆகஸ்ட் 22ம்தேதி மனைவி சரிதாவை செங்கல்பட்டில்  மாமியார் வீட்டில் விட்டு விட்டு   வந்துள்ளார். பின்னர்  பள்ளிக்கு சென்றிருந்த இரு மகன்களையும் காலை 11 மணிக்கு வீட்டிற்கு அழைத்து வந்தார்.  அவர்கள் இருவரையும் தலையணையை நெஞ்சில் வைத்து அமுக்கி   கொலை செய்துள்ளார். உயிரற்ற உடல்களை  தூக்கில் மாட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

போலீஸ்


 அதே ஆத்திரத்தில்  மாமியார் வீட்டிற்கு சென்று கட்டையால் மாமியாரை தாக்கியுள்ளார். அதன் பிறகு போலீசில் சரணடைந்துள்ளார். பணிமுடிந்து வீட்டிற்கு வந்த  சுரேஷின் தந்தை பழனி, தாய் இருவரும்  2 பேரன்களும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுரேஷிடம் கேட்கப்பட்ட போது” நாங்கள் இருவருமே பிரிந்த பிறகு பிள்ளைகள் சிரமப்படக் கூடாது” எனக் கூறியுள்ளார். கணவன் மனைவி பிரச்சனையில் பிள்ளைகளை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web