2 பொண்ணுங்களையும் கணவனுடன் அனுப்பாத மாமனார்... நடுரோட்டில் போராட்டத்தில் இறங்கிய மருமகன்கள்!
திருமணத்திற்கு பிறகு நடத்தை சரியில்லையென கணவனை விட்டுப் பிரிந்து சென்ற தங்களது மனைவிகளை மீண்டும் குடும்பம் நடத்த அனுப்பி வைக்காமல் மாமனார் வீட்டிலேயே வைத்திருப்பதாக கூறி 2 மாப்பிள்ளைகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூரைச் சேர்ந்தவர் சீனிவாச ராமானுஜ ஐயங்கார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கும், இளைய மகளை விஜயவாடாவை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

2 மகள்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 மகள்கள் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். பின்னர் மருமகன்களின் நடத்தை சரியில்லாததால் 2 மகள்களையும் கணவர் வீட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார். 2 மருமகன்களும் தங்கள் மனைவிகளை குடும்பம் நடத்த அனுப்புமாறு மாமனாரிடம் பலமுறை கெஞ்சினார்கள்.

ஆனால், தன் மகள்களை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் மருமகன்கள் இருவரும் நாதன வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். குஜராத் மாப்பிள்ளையும், விஜயவாடா மாப்பிள்ளையும் நேற்று ஏலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மனைவிகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
