பயிற்சிக்குச் சென்ற பெண் காவலர் விபத்தில் உயிரிழப்பு... பெரும் சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதன்மை காவலர் ரமாமணி, சனிக்கிழமையன்று நடைபெற்ற கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு, பின்னர் ஸ்கூட்டியில் மத்தூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக திரும்பிய ரமாமணியின் வாகனத்தில், பெங்களூருவிலிருந்து வந்த அதிவேக இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த மோதலில் ரமாமணி தூக்கி வீசப்பட்டு கடுமையாக காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமாமணியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து நிகழ்ந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்ததால், இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
