பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் பலி!
சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்தவர் 49 வயது ஜெயசித்ரா. செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர், செம்பியம் காவல் நிலையத்தில் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிபுரிந்து வருகிறார். காவல்நிலைய தபால் பணி காரணமாக தடய அறிவியல் துறைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அயனாவரம் பழனியப்பா தெருவில் வசித்து வரும் அக்கா பாண்டிச்செல்வி வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

பாண்டிச்செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயச்சித்ரா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கிவிட்டார். இதனையடுத்து அக்கா குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், பல்ஸ் அளவு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் KMC அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயச்சித்ரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா உடல் அவரது அக்கா பாண்டிசெல்வி வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டிக்கு உடலை எடுத்துச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
