பிரக்ஞானந்தாவுக்கு நிதி அமைச்சர் புகழாரம்... !

 
பிரக்ஞானந்தா

 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர்  பிப்ரவரி  9 ம் தேதி வரை நடைபெற உள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால்  இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.   இன்று  இடைக்கால   பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ” செஸ் கிராண்ட் மாஸ்டர்  பிரக்ஞானந்தாவுக்கு புகழராம் சூட்டினார். மேலும் விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குச் செல்வதைக் கண்டு நம்முடைய நாடு பெருமை கொள்கிறது.  

மோடி பிரக்ஞானந்தா

செஸ் விளையாட்டின் முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா, 2023  ம்  ஆண்டு உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு கடும் சவால் அளித்தார்.   2010 ல்  இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டும் தான் இருந்த நிலையில்  தற்போது கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 80ஆஅக உயர்ந்துள்ளது.   அஜர்பைஜானில்  நடைபெற்ற  ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர்  சென்னை   பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.  

பிரக்ஞானந்தா

உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் டை பிரேக்கரில் தோல்வியை சந்தித்தார்.   இத்தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதில் 2024ல்  பிரக்ஞானந்தா  ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாடும் தகுதியை பெற்றார்.இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web