ரூ.25,00,000 நிதியுதவி... சமூக செயற்பாட்டாளர்களுக்கு வழங்கி நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!
சமூகத்திற்கு உதவும் வகையில் செயல்பட்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்த நடிகர் கார்த்தி, இன்று சென்னையில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
அமுதவள்ளி- பழங்குடிகள் செயல்பாட்டாளர், 47 வயதான அசினா திருநங்கை செயல்பாட்டாளர், ரவி- மலைவாழ் மக்களுக்கான உதவியாளர் என கிட்டத்தட்ட 25 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கினார் நடிகர் கார்த்தி.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “என்னுடைய 25வது படத்தையொட்டி, தன்னலம் இல்லாமல் மக்கள் பணி செய்யும் தன்னார்வலர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனத் தோன்றியது. இவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பணம் நிச்சயம் மக்களைச் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க