நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்... அதிரடி காட்டிய போக்குவரத்து காவல்துறை !!
தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதில் இவர்களுக்கு 2 மகன்கள். யாத்ரா, லிங்கா. தனுஷ் ஐஸ்வர்யா இருவரின் பிரிவுக்கு பிறகு மகன்கள் இருவரும் தாத்தா பாட்டி அதாவது ரஜினியின் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். போயஸ் கார்டனிலேயே தனுஷ் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
மகன்கள் அடிக்கடி தந்தை வீட்டுக்கும் செல்வதுண்டு. சமீபத்தில் பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் 18 வயது கூர நிரம்பாமலும், தலைக்கவசம் அணியாமலும் பைக்கை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ரூ1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது.
தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதன் அடிப்படையில் தனுஷின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.தலைக்கவசம் மட்டுமல்ல தனுஷின் மூத்த மகனுக்கு வயது 17 தான் ஆகிறது. 18 வயது கூட நிரம்பாத நிலையில் பைக் ஓட்டியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!